அரசாங்கம் இலவசக் கல்வியை இல்லாதொழிக்கிறது; குற்றம் சுமத்துகிறார் ரணில்

அரசாங்கம் இலவசக் கல்வியை இல்லாதொழிக்கிறது; குற்றம் சுமத்துகிறார் ரணில்

எழுத்தாளர் Staff Writer

22 Jun, 2014 | 10:07 pm

அரசாங்கம் இலவசக் கல்வியை இல்லாதொழிக்கும் செயற்பாடொன்றை ஆரம்பித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஹோமகம பகுதியில் இடம்பெற்ற நிழ்வொன்றில் உரையாற்றியபோதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைக் குறிப்பிட்டார்.

[quote]அன்று போர்த்துக்கேயர்கள் விகாரைகளையும், கோவில்களையும் அழித்தனர். அதேபோன்று (பீப் ஒலி…) இன்று இலவசக் கல்வியை அழிக்கின்றனர், என்பதனை கவலையுடன் கூற வேண்டும். சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து இந் நாட்டின் கல்வியை முழுமையாக இல்லாதொழித்தனர்.  பல்கலைக்கழங்களுக்கு நிதி வழங்குவதில்லை. தனியார் நிறுவனங்களுக்கு செல்லுமாறு கூறுகின்றனர். இல்லாவிடின் வெளிநாடு செல்லுமாறு கூறுகின்றனர். எனவே நாம் இதனை மாற்றியமைக்க வேண்டும். அதற்காக (பீப் ஒலி…) விரட்ட வேண்டும். அதற்காக நாம் ஒன்றிணைய வேண்டும். மக்கள் கருத்துக்கணிப்பொன்றை நடாத்த வேண்டும். தேர்தல் ஒன்று நடைபெறாவிடின் வீதிக்கு இறங்கி அவர்களை விரட்டும் வரை போராட வேண்டும்.[/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்