யுக்ரைனில் உள்ள ரஷ்ய ஆதரவு தலைவர்களுக்கு எதிராக அமெரிக்கா தடை விதிப்பு

யுக்ரைனில் உள்ள ரஷ்ய ஆதரவு தலைவர்களுக்கு எதிராக அமெரிக்கா தடை விதிப்பு

யுக்ரைனில் உள்ள ரஷ்ய ஆதரவு தலைவர்களுக்கு எதிராக அமெரிக்கா தடை விதிப்பு

எழுத்தாளர் Staff Writer

21 Jun, 2014 | 2:40 pm

யுக்ரேனின் கிழக்குப்  பிராந்தியத்திலுள்ள  ரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அமெரிக்கா தடைகளை  அமுல்படுத்தியுள்ளது.

நாட்டின் கிழக்குப் பிராந்தியத்தில் தொடரும் மோதல்கள் குறைவடையும் அறிகுறிகள் தென்படாத நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன்பிரகாரம் சொத்துக்கள் முடக்கம் உள்ளிட்ட தடைகள் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சித் தலைவர்கள் ஏழு பேருக்கு விதிக்கப்பட்டுள்ளன.

ரஷ்யாவிற்கு எதிராக மேலதிக தடைகளை விதிக்கப் போவதாக மேற்குலக நாடுகள் எச்சரித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

யுக்ரைய்னில் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் ரஷ்யா செயற்படுவதாக மேற்குலக நாடுகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

யுக்ரைய்னின் க்ரைமியா பிராந்தியத்தை தமது நாட்டுடன் இணைத்ததை அடுத்து ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் தடைகளை விதித்திருந்தன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்