மத விவகாரங்கள் தொடர்பில் 52 முறைபாடுகள்

மத விவகாரங்கள் தொடர்பில் 52 முறைபாடுகள்

மத விவகாரங்கள் தொடர்பில் 52 முறைபாடுகள்

எழுத்தாளர் Staff Writer

21 Jun, 2014 | 9:21 am

மத விவகாரங்கள் தொடர்பான முறைபாடுகளை விசாரிக்கும் விசேட பொலிஸ் பிரிவிற்கு இதுவரை 52 முறைபாடுகள் கிடைதுள்ளன.

இந்த விசேட பொலிஸ் பிரிவு கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்டது.

தொடர்ந்தும் இந்த விசேட பொலிஸ் பிரிவை நடத்திச் செல்ல எதிர்ப்பார்ப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண குறிப்பிடுகின்றார்.

மத விவகாரங்கள் தொடர்பான முறைபாடுகளை விசாரிக்கும் விசேட பொலிஸ் குழுவிற்கு தொலைபேசி ஊடாகவோ அல்லது பெக்ஸ் மூலமோ முறைபாடுகளை முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் காணப்படுகின்றது.

0112 30 76 74 அல்லது 0112 30 66 94 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு முறைபாடுகளை தெரிவிக்க முடியும்.

இதுதவிர 0112 30 66 88 மற்றும் 0112 30 74 06 ஆகிய பெக்ஸ் இலக்கங்களுக்கும் மத விவகாரங்கள் தொடர்பான முறைபாடுகளை முன்வைக்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்