மத வன்முறைகள் தொடர்பில் 5 விசேட விசாரணை குழுக்கள் நியமனம்

மத வன்முறைகள் தொடர்பில் 5 விசேட விசாரணை குழுக்கள் நியமனம்

மத வன்முறைகள் தொடர்பில் 5 விசேட விசாரணை குழுக்கள் நியமனம்

எழுத்தாளர் Staff Writer

21 Jun, 2014 | 10:28 am

அளுத்கம, பேருவளை மற்றும் வெலிபன்ன பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஐந்து விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைவமையகம் தெரிவிக்கின்றது.

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்கள ஆகியவற்றின் விசாரணைக் குழுக்களும் இதில் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண குறிப்பிடுகின்றார்.

சம்பவம் இடம்பெற்ற பகுதிகளின் பாதுகாப்பிற்காக பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையை சேர்ந்த பத்தாயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அந்த பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 58 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அஜித் ரோஹண சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர், கலாநிதி பிரதிபா மஹாநாமஹேவா தெரிவிக்கின்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்