பாணந்துறையில் தீக்கிரையான பிரபல வர்த்தக கட்டடம் – காணொளி இணைப்பு

பாணந்துறையில் தீக்கிரையான பிரபல வர்த்தக கட்டடம் – காணொளி இணைப்பு

எழுத்தாளர் Staff Writer

21 Jun, 2014 | 12:02 pm

பாணந்துறை பகுதியிலுள்ள பிரபல வர்த்தக கட்டடமொன்று தீக்கிரையாகி உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
இந்த தீ சம்பவம் இன்று அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிடுகின்றார்.

தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றார்.

தீக்கிரையான இந்த வர்த்தக கட்டடம் முன்னணி ஆடை விற்பனை நிறுவனமொன்றிற்கு சொந்தமானது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்கும் பொருட்டு 2 விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்