கிளிநொச்சியைச் சேர்ந்த குடும்பமொன்று தமிழகத்தில் தஞ்சம்

கிளிநொச்சியைச் சேர்ந்த குடும்பமொன்று தமிழகத்தில் தஞ்சம்

கிளிநொச்சியைச் சேர்ந்த குடும்பமொன்று தமிழகத்தில் தஞ்சம்

எழுத்தாளர் Staff Writer

21 Jun, 2014 | 8:28 pm

இலங்கையைச் சேர்ந்த நால்வர் சட்டவிரோதமாக படகு மூலம் தமிழகத்தை வந்தடைந்துள்ளதாக மண்டபம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்று காலை 6.30 அளவில் தனுஷ்கோடி அரிச்சல் முனையை வந்தடைந்த குறித்த படகில் இரண்டு சிறுவர்களும் இருந்ததாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகளே படகு மூலம்  தமிழகத்தைச் சென்றடைந்துள்ளனர்.

தலைமன்னாரிலிருந்து  இவர்கள்  நேற்றிரவு  பயணத்தை ஆரம்பித்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக மண்டபம் பொலிஸார் குறிப்பிட்டனர்.

தமிழகத்தின் புதுக்கோட்டை அகதிகள் முகாமில் வசித்துவரும் உறவினர்களுடன் சேர்ந்து வாழ்வதற்காக தாம் கிளிநோச்சியிருந்து  வருகைதந்ததாக குறித்த நபர்கள் வாக்குமூலமளித்துள்ளனர்.

தமது இந்த தீர்மானத்திற்கு வறுமையே காரணம் எனவும் அவர்கள் தெரிவித்ததாக மண்டபம் பொலிஸார் கூறினர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்