சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பிரான்ஸ் பிரஜை கைது

சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பிரான்ஸ் பிரஜை கைது

சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பிரான்ஸ் பிரஜை கைது

எழுத்தாளர் Staff Writer

21 Jun, 2014 | 7:57 pm

பாலியல் துஷ்பிரயோகத்திற்காக இலங்கையின் சிறுவர்களை பிரான்ஸ் பிரஜைக்கு விற்பனை செய்த மற்றுமொரு சந்தேகநபரை அடையாளம் காண்பதற்காக பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சட்டவிரோத நடவடிக்கையுடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.

காலி பிரதேசத்தைச் சேர்ந்த 25 மற்றும் 32 வயதான இரண்டு சந்தேகநபர்களையும் அடுத்த மாதம் இரண்டாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர்களால் பிரான்ஸ் பிரஜைக்கு விற்கப்பட்ட 30 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது

துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சிறுவர்களின் காணொளிகள் மற்றும் புகைப்படங்களை பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சு வழங்கியுள்ளதாக அதிகார சபையின் பொலிஸ் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

சிறுவர் துஷ்பிரயோகத்துடன் தொடர்புடைய 52 வயதான பிரான்ஸ் பிரஜை 2006 ஆம் ஆண்டிலிருந்து 2012 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு வந்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

வேறு சில நாடுகளையும் சேர்ந்த சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகநபர் தற்போது பிரான்ஸில் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பிரான்ஸ் அரசாங்கம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இலங்கையில் விசாரணை முன்னெடுக்கப்படுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்