இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் பல்வேறு நாடுகளும் கருத்து

இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் பல்வேறு நாடுகளும் கருத்து

இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் பல்வேறு நாடுகளும் கருத்து

எழுத்தாளர் Staff Writer

21 Jun, 2014 | 8:17 pm

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 26 ஆவது கூட்டத் தொடரில் இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் பல்வேறு நாடுகளும் கருத்துக்களை வெளியிட்டுள்ளன.

இந்த கருத்துக்களுக்கு பதிலளித்த ஜெனீவாவுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மனீஷா குணசேகர, அனைத்து இன மக்களின் உயிர்கள்  , சொத்துக்கள் மற்றும்   மத வழிபாட்டுத் தளங்களை  பாதுகாப்பதற்கு இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தெரிவித்துள்ளார்.

அளுத்கம மற்றும் பேருவளை சம்பவங்களை அடுத்து குறித்த பகுதியில் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் உடனடி நடவடிக்கை மேற்கொண்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜேர்மனி, நோர்வே மற்றும் கெனடா ஆகிய நாடுகள் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் வெளியிட்ட கருத்துக்களுக்கு பதிலளித்தபோதே மனீஷா குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

ஏதேனும் ஒரு இனம் அல்லது மதத்திற்கு எதிரான வன்முறைகளை இலங்கை அரசாங்கம் அனுமதிக்காது எனவும் ஜெனீவாவுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி குறிப்பிட்டுள்ளார்.

அண்மைக்காலத்தில் இடம்பெற்ற அனைத்து சம்பவங்களின்போதும் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலுள்ள அனைத்துப் பிரதிநிதிகளும் மதச் சுதந்திரத்தை அனுபவித்து வருவதோடு அந்த உரிமை அரசியல் அமைப்பிலும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜெனீவாவுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மனீஷா குணசேகர மேலும் வலியுறுத்தியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்