இந்த வருடத்தில் 45 பேர் டெங்கு நோயால் உயிரிழப்பு

இந்த வருடத்தில் 45 பேர் டெங்கு நோயால் உயிரிழப்பு

இந்த வருடத்தில் 45 பேர் டெங்கு நோயால் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

21 Jun, 2014 | 9:30 am

வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 45 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

அத்துடன் 15 ஆயிரம் பேர் டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வுப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இம்மாதத்தின் இதுவரையான காலப் பகுதியில் 2 ஆயிரத்து 357 பேர் டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 868 பேர் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையான 5 ஆயிரத்து 648 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில் 2 ஆயிரத்து 368 பேரும் களுத்துறை மாவட்டத்தில் ஆயிரத்து 22 பேரும் டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வருடத்தில் கடந்த மே மாதத்திலேயே அதிக எண்ணிக்கையான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

மூவாயிரத்து 988 பேர் கடந்த மாதத்தில் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதுடன், கடந்த ஜனவரி மாதம் மூவாயிரத்து 605 பேர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தனர்.

இதேவேளை மேல் மாகாணத்தில் இராணுவத்தினர் பொலிஸார் மற்றும் சுகாதார அமைச்சு ஆகியன இணைந்து இரண்டாவது நாளாகவும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளனர்.

டெங்குக் காய்ச்சல் தொடர்பாக மக்களைத் தெளிவூட்டும் செயற்பாடு இதன்போது முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் பபா பலிஹவடன தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்