அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஏற்பாட்டாளர் கைது

அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஏற்பாட்டாளர் கைது

அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஏற்பாட்டாளர் கைது

எழுத்தாளர் Staff Writer

21 Jun, 2014 | 8:07 pm

அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஏற்பாட்டாளர் உட்பட மூன்று பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் பேராதனை பல்கலைகழகத்தின் இணைந்த சுகாதார விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் பேராதனை பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் ஆகியோரும்  அடங்குவதாக  பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 19 ஆம் திகதி பேராதனை பல்கலைக்கழகத்திற்குள் பிரவேசித்து தலைமை பாதுகாப்பு அதிகாரிகள் இருவர் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோருக்கு அச்சுறுத்தல் விடுத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அச்சுறுத்தல் விடுத்தமை, கடமைக்கு இடையூறு செய்தமை பல்கலைக்கழக வளாகத்திற்குள் அத்துமீறி பிரவேசித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்குள் இவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன.

சந்கேதநபர்கள் இன்று கண்டி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்