அடுத்த சுற்றுக்கு பிரான்ஸ் மற்றும் கொஸ்டரிக்கா தகுதி

அடுத்த சுற்றுக்கு பிரான்ஸ் மற்றும் கொஸ்டரிக்கா தகுதி

அடுத்த சுற்றுக்கு பிரான்ஸ் மற்றும் கொஸ்டரிக்கா தகுதி

எழுத்தாளர் Staff Writer

21 Jun, 2014 | 11:15 am

உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இறுதி 16 அணிகள் விளையாடும் சுற்றுக்கு பிரான்ஸ் மற்றும் கொஸ்டரிக்கா அணிகள் தகுதி பெற்றுள்ளன.

குழு ஈ க்கான போட்டியில் சுவிட்ஸர்லாந்து அணியை 5 – 2 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்திய பிரான்ஸ் குழுவில் முதல் அணியாக அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

இதேகுழுவில் நடைபெற்ற போட்டியொன்றில் ஹொண்டூராஸ் அணியை 2 – 1 என்ற கோல் கணக்கில் வெற்றிகொண்டதன் மூலம் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை ஈக்குவடோர் தக்க வைத்துள்ளது/

தொடர்ச்சியாக இரண்டாவது தோல்வியைச் சந்தித்துள்ள ஹொண்டூராஸ் அணி உலக கிண்ண கால்ப்பந்தாட்ட தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

இதேவேளை  குழு டியில் இருந்து இறுதி 16 அணிகள் விளையாடும் சுற்றுக்கு முதலாவது அணியாக கொஸ்டரிக்கா முன்னேறியுள்ளது.

முன்னாள் உலக சாம்பியான இத்தாலி அணியை 1 – 0 என்ற கோல் கணக்கில் கொஸ்டரிக்கா வெற்றிகொண்டது.

இந்தப் போட்டியில் கொஸ்டரிக்கா வெற்றிபெற்றதன் மூலம் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு இங்கிலாந்து அணிக்கு இருந்த இறுதி வாய்ப்பும் அற்றுப் போயுள்ளது.

1958 ஆம் ஆண்டிற்கு பின்னர் இங்கிலாந்து அணி உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரில் முதல் சுற்றுடன் வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்