வாடகை தாய் குழந்தை விவகாரம்; ஷாருக் கான் மீதான வழக்கு தள்ளுபடி

வாடகை தாய் குழந்தை விவகாரம்; ஷாருக் கான் மீதான வழக்கு தள்ளுபடி

வாடகை தாய் குழந்தை விவகாரம்; ஷாருக் கான் மீதான வழக்கு தள்ளுபடி

எழுத்தாளர் Staff Writer

20 Jun, 2014 | 4:31 pm

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற விவகாரம் தொடர்பாக நடிகர் ஷாருக்கான் மற்றும் அவரது மனைவிக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

நடிகர் ஷாருக்கான், கௌரிகான் தம்பதிக்கு ஒரு ஆண், பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த ஆண்டு வாடகை தாய் மூலம் 3ஆவதாக ஆண் குழந்தை ஒன்றை அவர்கள் பெற்றுக் கொண்டனர். குழந்தை பிறப்பதற்கு முன்பு பத்திரிகை ஒன்றுக்கு இவர்கள் வழங்கிய செவ்வியில்   வாடகை தாய் மூலம் தங்களுக்கு ஆண் குழந்தை பிறக்க இருப்பதாக தெரிவித்திருந்தனர்.

கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கண்டறிவது சட்டப்படி குற்றமாகும். குழந்தை பிறக்கும் முன்னரே அது ஆண் என்பதை அறிந்து கொண்டதன் வாயிலாக நடிகரும், அவரது மனைவியும் சட்டத்தை மீறிவிட்டதாக மும்பையை சேர்ந்த பெண் சமூக ஆர்வலர் ஒருவர் நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து குறித்த பெண் மும்பை உயர் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார். வழக்கில் ஷாருக்கான் சார்பாக ஆஜராகிய சட்டத்தரணி ‘வாடகை தாய்க்கு கருவிலிருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறியும் சோதனை நடத்தப்படவில்லை. மருத்துவமனையில் குழந்தை பிறந்த பின்னரே அது ஆண் என்பது ஷாருக்கானுக்கு தெரியும். குழந்தை பிறந்த பின்னரே பத்திரிகையிலும் ஷாருக்கானின் செவ்வி வெளியானது’ எனக் குறிப்பிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கினை தள்ளுபடி செய்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்