லோட்ஸ் மைதான சிறப்பு பெயர்ப் பலகையில் இடம்பிடித்தனர் சங்கக்கார, மெத்யூஸ்

லோட்ஸ் மைதான சிறப்பு பெயர்ப் பலகையில் இடம்பிடித்தனர் சங்கக்கார, மெத்யூஸ்

லோட்ஸ் மைதான சிறப்பு பெயர்ப் பலகையில் இடம்பிடித்தனர் சங்கக்கார, மெத்யூஸ்

எழுத்தாளர் Staff Writer

20 Jun, 2014 | 4:07 pm

இலங்கை கிரிக்கெட் அணியின் குமார் சங்கக்கார மற்றும் அஞ்சலோ மெத்யூஸ் ஆகியோரின் பெயா்கள் புகழ் பெற்ற லோட்ஸ் மைதான விசேட விருந்தினர் தங்கும் அறைக்கு அருகில் அமைந்துள்ள உள்ள ‘பெயர் பலகை’யில் பொறிக்கப்பட்டுள்ளன.

இவா்கள் இருவரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டின் போது பெற்றுக்கொண்ட சதங்களை கெளரவிக்கும் வகையில், இவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

இதற்கு முன்னர் சங்கக்கார, மூன்று முறை லோட்ஸ் மைதானத்தில்  விளையாடியுள்ள போதிலும் சதம் பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கவில்லை,  36 வயதான குமார் சங்கக்கார 147 ஓட்டங்களை பெற்று இந்த கௌரவத்தைப் பெற்றுள்ளார்.

இதேவேளை, இலங்கை அணித் தலைவா் அஞ்சலோ மெத்யூஸும் 102 ஓட்டங்களை பெற்று சங்கக்காரவுடன் இந்த கௌரவத்தை பெற்றுள்ளார்.

இதற்கு முன்னா் இலங்கையைச் சேர்ந்த டில்ஷான், வெத்தமுனி, துலிப் மென்டிஸ், அமல் சில்வா, மாவன் அத்தப்பத்து மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் மாவன் அத்தப்பத்து, சந்திமால் மற்றும் தரங்க ஆகியோர் ஒரு நாள் கிரிக்கெட்டிலும் லோட்ஸ் மைதானத்தில் சதங்களை பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இங்கிலாந்துடன் இடம்பெற்ற 4ஆவது ஒரு நாள் போட்டியில் குமார் சங்கக்கார லோட்ஸ் மைதானத்தில் சதம் பெற்றுக் கொண்டமை சிறப்பம்சமாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்