மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் பலி

மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் பலி

மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் பலி

எழுத்தாளர் Staff Writer

20 Jun, 2014 | 1:05 pm

பலாங்கொடை, பள்ளேகந்தை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்றிரவு 10.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

கடமையின் நிமித்தம் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோதே பொலிஸ் கான்ஸ்டபிள் விபத்திற்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஓபநாயக்க பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய கான்ஸ்டபிள் ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

41 வயதான இந்த பொலிஸ் கான்ஸ்டபிள் பலாங்கொடை வேகஹபிட்டிய பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்