மேல் மாகாணத்தில் டெங்குவை ஒழிக்க விசேட திட்டம்

மேல் மாகாணத்தில் டெங்குவை ஒழிக்க விசேட திட்டம்

மேல் மாகாணத்தில் டெங்குவை ஒழிக்க விசேட திட்டம்

எழுத்தாளர் Staff Writer

20 Jun, 2014 | 9:41 am

மேல் மாகாணத்தில் டெங்கு நுளம்புகளை ஒழிக்கும் மூன்று நாள் திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

இதன் மூலம் நுளம்பு பெருக்கம் அதிகமாக காணப்படும் இடங்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதாக அமைச்சின் தொற்றுநோய் ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் பபா பலிஹவடன கூறுகின்றார்.

இந்த மூன்று நாள் திட்டத்தின் கீழ் பாடசாலைகளில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், இன்றைய தினம் பாடசாலை சூழல் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிடுகின்றது.

அத்துடன் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தி, நுளம்பு பெருகக்கூடிய இடங்களை சுத்தப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சின் தொற்றுநோய் ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர்  தெரிவிக்கின்றார்.

சுகாதார அமைச்சு பாதுகாப்பு பிரிவுகள் பொலிஸார் மற்றும் அரச உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் இந்த மூன்று நாள் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதில் அரச நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தி 2,000ற்கும் அதிகமானவர்கள் பங்கேற்கவுள்ளதாகவும் டொக்டர் பபா பலிஹவடன குறிப்பிட்டார்.

வீடு வீடாகச் சென்று நுளம்பு பெருக்கம் தொடர்பில் மக்களை தெளிவூட்டுவதுடன் அரச நிறுவனங்களுடன் தொடர்புபட்ட விசேட திட்டமொன்றையும் செயற்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் மேலும் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்