மாயமான மலேசிய விமானம்; செயற்கைக்கோளின் உதவியுடன் தேடுதலை ஆரம்பிக்கிறது அவுஸ்திரேலியா

மாயமான மலேசிய விமானம்; செயற்கைக்கோளின் உதவியுடன் தேடுதலை ஆரம்பிக்கிறது அவுஸ்திரேலியா

மாயமான மலேசிய விமானம்; செயற்கைக்கோளின் உதவியுடன் தேடுதலை ஆரம்பிக்கிறது அவுஸ்திரேலியா

எழுத்தாளர் Staff Writer

20 Jun, 2014 | 12:32 pm

எம்.எச் 370 விமானம் தொடா்பான அடுத்த கட்ட தேடுதல் நடவடிக்கைகள் முந்தைய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படட்ட இடத்திற்கு 100 மைல் தொலைவில் உள்ள கடற் பிரதேசத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்ரேலிய போக்குவரத்து பாதுகாப்பு பிரிவின் உயரதிகாரி ஒருவா் இது தொடா்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், இது தொடர்பான உத்தியோக பூா்வமான அறிவிப்பு எதிர்வரும் வாரத்தில் அறிவிக்கப்படும் என தெரிவித்தார். இதற்காக அதிக வினைத்திறன் கொண்ட அகழ்வு உபகரணங்கள் பயன்னடுத்தப்படவுள்ளன.

இந்த பகுதியில் காணாமற் போன விமானத்தின் கறுப்புப் பெட்டியிலிருந்து பெறப்பட்ட சமிக்ஞைகள் மூலமே இதுவரை காலம் தேடுதல் மேற்கொள்ளப்பட்டதாகவும், எனினும் தற்போது இச்சமிக்ஞைகள் வேறுபட்ட பிரதேசங்களிள் இருந்தே பெறப்படுவதாகவும் நம்பப்படுகிறது.

இந்நிலையில், தற்போது செயற்கைக்கோளின் மூலம் ​​பெறப்பட்ட தகவல்களின் உதவியுடனே தேடுதல் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த ஆய்வுகள் மேலும் சிக்கலானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு கோணங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த நடவடிக்கையை நிறைவு செய்வதற்கு 12 மாதங்கள் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மார்ச் மாதம் 8 ஆம் திகதி காணாமற் போன இவ்விமானம் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறாத நிலையில் புதிய ஆய்வு முயற்சிகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்