பேராதனை போதனா வைத்தியசாலையில் கடமையில் ஈடுபட, குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்களுக்கு இடையூறு

பேராதனை போதனா வைத்தியசாலையில் கடமையில் ஈடுபட, குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்களுக்கு இடையூறு

பேராதனை போதனா வைத்தியசாலையில் கடமையில் ஈடுபட, குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்களுக்கு இடையூறு

எழுத்தாளர் Staff Writer

20 Jun, 2014 | 12:55 pm

பேராதனை போதனா வைத்தியசாலையில் சேவைக்கு சமூகமளிப்பதில் தொடர்ந்தும் தாங்களுக்கு இடையூறு விளைவிக்கப்படுவதாக குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

வைத்தியசாலையின் தாதி உத்தியோகத்தர்கள் சேவைக்கு சமூகமளிப்பதற்கு தமக்கு இடமளிக்கவில்லை என குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்கள் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளனர்.

பேராதனை வைத்தியசாலையின் பணிப்பாளர் எழுத்துமூலம் தாதி உத்தியோகத்தர்களுக்கு அறிவித்துள்ள போதிலும், தாதியர்கள் அதனை பொருட்படுத்தவில்லை என அரசாங்க குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் தேவிகா கொடிதுவக்கு தெரிவிக்கின்றார்.

இந்த குற்றச்சாட்டு குறித்து அரசாங்க தாதி உத்தியோகத்தர் சங்கத் தலைவர் சமன் ரத்னப்பிரியவிடம் தொடர்புகொண்டு வினவப்பட்டது.

பேராதனை போதனா வைத்தியசாலையில் குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்கள் தங்களின் கடமைகளை முன்னெடுப்பதற்கு எவ்வித இடையூறுகளும் ஏற்படுத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்களின்றி அந்த சேவைகளில் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என்றும் அரசாங்க தாதி உத்தியோகத்தர் சங்கத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து பேராதனை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஜயபந்து ஹேரத்திடம் வினவியபோது, சுகாதார அமைச்சரின் பணிப்புரைக்கமைய குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்கள் இடையூறின்றி தமது பணிகளை தொடர்வதற்கான வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதேவேளை, பணியில் ஈடுபடுவதற்கு தமக்கு இடமளிக்கப்படவில்லை என பேராதனை போதனா வைத்தியசாலையின் குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்கள் நேற்றிரவு முறைபாடு செய்ததாக பேராதனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த பிரச்சினை தொடர்பில் நீதிமன்றத்திற்கும் விடயங்களை சமர்ப்பித்துள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிடுகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்