பஸ் மோதியதில் சைக்கிளில் பயணித்த பாடசாலை மாணவி உயிரிழப்பு

பஸ் மோதியதில் சைக்கிளில் பயணித்த பாடசாலை மாணவி உயிரிழப்பு

பஸ் மோதியதில் சைக்கிளில் பயணித்த பாடசாலை மாணவி உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

20 Jun, 2014 | 10:18 am

பாதெனிய – அனுராதபுரம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலதிக வகுப்புக்குச் சென்று சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், பஸ்ஸொன்றுடன் மாணவி மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் பலத்த காயமடைந்த மாணவி மஹவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

6ஆம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பஸ்ஸையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்