தேசிய ஒற்றுமை மூலம் சாதிக்க முடியாதது எதுவுமில்லை – ஜனாதிபதி

தேசிய ஒற்றுமை மூலம் சாதிக்க முடியாதது எதுவுமில்லை – ஜனாதிபதி

தேசிய ஒற்றுமை மூலம் சாதிக்க முடியாதது எதுவுமில்லை – ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

20 Jun, 2014 | 6:02 pm

நாட்டின் தேசிய ஒற்றுமை மூலம் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பேதங்களை புறந்தள்ளி, ஐக்கியத்துடன் நாட்டை கட்டியெழுப்பு வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கண்டி போகம்பர சிறைச்சாலையின் அபிவிருந்தி பணிகளை உத்தியோகபூர்வமாக அரசாங்கத்திடம் கையளிப்பதற்காக இன்று நடைபெற்ற நிகழ்வில் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

நாட்டு மக்களிடையே காணப்படும் நல்லிணக்கம், சில அரசியல்வாதிகளிடம் இல்லாத காரணத்தினால் முழுநாட்டிற்கும் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தமது பதவியை தொடர்ந்தும் காப்பாற்றிக்கொள்வதற்காக, இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சில அரசியற் தலைவர்கள் சர்வதேசத்திற்குச் சென்று, நாட்டை காட்டிக்கொடுப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கண்டி – போகம்பர சிறைச்சாலை, சிறைச்சாலைகள் அமைச்சரினால் ஜனாதிபதி மஹிந்த ராஷஜபக்ஸவிடம் கையளிக்கப்பட்டது.

இந்தச் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள், தும்பர சிறைச்சாலைக்கு மாற்றப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம கூறினார்.

போகம்பர சிறைச்சாலையில் சுமார் 2,500 கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்