சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இராணுவ உறுப்பினர் கைது

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இராணுவ உறுப்பினர் கைது

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இராணுவ உறுப்பினர் கைது

எழுத்தாளர் Staff Writer

20 Jun, 2014 | 12:59 pm

முந்தல் பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் இராணுவ உறுப்பினர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் முந்தல் பிரதேச இராணுவ வீரர்களுக்கான வீட்டுத் திட்டத்தில் பணிக்காக அமர்த்தப்பட்டிருந்த இராணுவ வீரர் ஒருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

16 வயதான சிறுமி ஒருவரே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் செய்த முறைப்பாட்டிற்கமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியதுடன், சந்தேகநபரை புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்