உலக அகதிகள் தினம் இன்று

உலக அகதிகள் தினம் இன்று

உலக அகதிகள் தினம் இன்று

எழுத்தாளர் Staff Writer

20 Jun, 2014 | 1:18 pm

இன்று உலக அகதிகள் தினமாகும், உலகில் தற்போது சுமார் 7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அகதிகளாக அல்லல்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

ஜூன் மாதம் 20 ஆம் திகதி ‘ஆபிரிக்க அகதிகள் தினம்’ கொண்டாடப்படுவதால், அந்த நாளை உலகில் உள்ள பல நாடுகள் ‘உலக அகதிகள் தினமாக’ப் பிரகடனப்படுத்தியிருந்தன.

இதேவேளை ஆபிரிக்க அகதிகள் தினமான ஜூன் மாதம் 20 ஆம் திகதியை உலக அகதிகள் தினமாகக் கொண்டாட இரண்டாயிரமாம் ஆண்டு ஐ.நா பொதுச் சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சுமார் 7.6 மில்லியன் மக்கள் இன்னமும் இந்த உலகில் அகதிகளாக உள்ளனர் என்பது இந்த உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் செய்திகளில் ஒன்று.

1994 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இடம்பெயரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக ஐ.நா. குறிப்பிடுகின்றது.

யுத்தம், வன்முறை, பஞ்சம் போன்ற பல்வேறு காரணங்களால் அகதிகள் உருவாகின்றனர்.

சிரியா, இலங்கை, ஆப்கானிஸ்தான், சூடான், சோமாலியா போன்ற நாடுகளிலிருந்தே அதிகளவான அகதிகள் உருவாகியுள்ளதாக ஐ.நா கூறுகிறது.

உலக அகதிகளில் 55 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் சிரிய அகதிகள் எனவும் ஐ.நா தன் கணக்கெடுப்பில் பதிவு செய்துள்ளது.

இலங்கையைச் சேர்ந்த சுமார் 10 லட்சம் பேர் உலக நாடுகளில் அகதிகளாக தஞ்சம் பெற்றுள்ளனர்.

பல்வேறுபட்ட மோதல்கள் காரணமாக அகதிகளாகி தமது நாட்டினுள்ளும், வேறு பிற நாடுகளிலும் இடம்பெயர்ந்து, பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் வாழ்ந்துவரும் அகதிகள் தொடர்பில், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்நாளின் முக்கியமான நோக்கமாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்