முதல் சுற்றுடன் வெளியேறியது இங்கிலாந்து, இரண்டாவது வாய்ப்பையும் தவறவிட்டது ஜப்பான்

முதல் சுற்றுடன் வெளியேறியது இங்கிலாந்து, இரண்டாவது வாய்ப்பையும் தவறவிட்டது ஜப்பான்

முதல் சுற்றுடன் வெளியேறியது இங்கிலாந்து, இரண்டாவது வாய்ப்பையும் தவறவிட்டது ஜப்பான்

எழுத்தாளர் Staff Writer

20 Jun, 2014 | 10:04 am

உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரில், நேற்று இடம்பெற்ற இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் உருகுவே, லுாயிஸின் மிகச்சிறப்பான இரண்டு கோல்களின் உதவியுடன் வெற்றி பெற்றது.

நான்கு வாரங்களுக்கு முன்னா் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட இவா் தனது மீள் வருகையை மிகச்சிறந்த முறையில் நேற்றைய போட்டியில் வெளிப்படுத்தினார்.

இப்போட்டியில் ரூனி தனது கன்னி உலகக்கிண்ண கோலை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Wayne-Rooney

இந்த தோல்வியுடன் 1958 ஆம் அண்டுக்கு பின்னா் முதல் முறையாக குழு நிலை ஆட்டங்களுடனேயே வெளியேற வேண்டிய துா்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டது இங்கிலாந்து.

இதேவேளை கொலம்பியா தென் அமெரிக்க அணிகளின் சிறப்பான ஆட்ட பெறுதிகளை நேற்றைய தினமும் நிரூபித்தது. ஐவரிகோஸ்ட் அணியை எதிர் கொண்ட கொலம்பியா 2-1 எனும் கணக்கில் வெற்றிபெற்றுக்கொண்டது.

colombia-vs-ivory-coast

கொலம்பியா அணியால் பெறப்பட்ட 2 கோல்களும் ஆட்டத்தின் இரண்டாம் பகுதியிலேயே பெற்றுக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஜப்பான், கிறீஸ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தது.

japan-greece-sad

அணியின் தலைவா் கொஸ்டாஸ் கட்சோரனிளஸ் ஆட்டத்தின் 38ஆவது நிமிடத்தில் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்ட நிலையில், 10 வீரர்களுடன் கிறீஸ் அணி விளையாடியமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்