ஈராக்கிற்கு இராணுவத்தை அனுப்பப் போவதில்லை – ஒமாபா

ஈராக்கிற்கு இராணுவத்தை அனுப்பப் போவதில்லை – ஒமாபா

ஈராக்கிற்கு இராணுவத்தை அனுப்பப் போவதில்லை – ஒமாபா

எழுத்தாளர் Staff Writer

20 Jun, 2014 | 5:38 pm

ஈராக்கிற்கு உதவும் வகையில் தமது இராணுவ ஆலோசகர்களை அனுப்பவுள்ளதாக அமெரிக்க தெரவித்துள்ளது.

அவசியம் ஏற்படுமிடத்து ஈராக்கின் இராணுவ நடவடிக்கைகளுக்கு   உதவயளிக்கப்படும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரவித்துள்ளார்.

இருப்பினும் அமெரிக்கா தனது படைகளை ஈராக்கிற்கு அனுப்பாது என பராக் ஒபாமா அறிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த மோதல்களுக்கு இராணுவ நடவடிக்கை ஒரு தீர்வல்ல எனவும் ஒபாமா சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்கா 300 இராணுவ ஆலோசகர்களை அனுப்பத் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிளர்ச்சியாளர்களை இலக்கு வைத்து வான் தா்குதல்களை நடத்துவதற்கு ஈராக் அமெரிக்காவின் உதவியை கோரியிருந்த நிலையிலேயே பாரக் ஒபாமாவின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்