இலங்கைக்கு 105ஆவது இடம்

இலங்கைக்கு 105ஆவது இடம்

இலங்கைக்கு 105ஆவது இடம்

எழுத்தாளர் Staff Writer

20 Jun, 2014 | 2:51 pm

2014 ஆம் ஆண்டிற்கான உலக சமாதான சுட்டெண் பிரகாரம் இலங்கை 105ஆம் இடத்தில் உள்ளதாக தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

உலகின் 162 நாடுகளை உள்ளடக்கி பொருளாதாரம் மற்றும் சமாதானத்திற்கான ஸ்தாபனம் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.

இந்த சுட்டெண் பிரகாரம் 2013 ஆம் ஆண்டில் இலங்கை 110 ஆவது இடத்தில் இருந்தது.

எட்டாவது தடவையாகவும் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஆய்வின் மூலம் உலகில் சமதானம் நிலவுகின்ற முதற்தர நாடாக ஐஸ்லாந்து பதிவாகியுள்ளது.

உலக சமாதான நாடுகளின் சுட்டெண் பிரகாரம் டென்மார்க் இரண்டாம் இடத்திலும், அவுஸ்திரேலியா மூன்றாம் இடத்திலும் உள்ளன.

உலகின் ஆகக்குறைந்த சமாதானம் நிலவுகின்ற நாடாக, சிரியா 162 ஆவது இடத்தில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

உலக சமாதான சுட்டெண் படி ஆப்கானிஸ்தான் 161 ஆவது இடத்தையும், தென் சூடான் 160 ஆவது இடத்தையும் வகிக்கின்றன.

சமதான நாடுகளுக்கான சுட்டெண் பிரகாரம் தென்னாபிரிக்க நாடுகளில் பூட்டான் 16 ஆவது இடத்தையும், நேபாளம் 76 ஆவது இடத்தையும், பங்களாதேஷ் 98 ஆவது இடத்தையும், இந்தியா 143 ஆவது இடத்தையும், பாகிஸ்தான் 154 ஆவது இடத்தையும் பெற்றுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்