இந்திய மீனவர்கள் 46 பேர் விளக்கமறியலில்

இந்திய மீனவர்கள் 46 பேர் விளக்கமறியலில்

இந்திய மீனவர்கள் 46 பேர் விளக்கமறியலில்

எழுத்தாளர் Staff Writer

20 Jun, 2014 | 2:55 pm

இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 46 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான 24 மீனவர்களும் அடுத்த மாதம் இரண்டாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மீனவர்கள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக கடற்றொழில்  திணைக்களத்தின் யாழ். மாவட்ட பிரதிப் பணிப்பாளர் நடராஜா கணேஷமூர்த்தி தெரிவித்தார்.

இவர்களின் 06 படகுகளும் காங்சேன்துறை துறைமுகத்தில் தடுத்து வைக்க்பட்டுள்ளன.

இதேவேளை தலைமன்னார் கடற்பரப்பில் கைதான இந்திய மீனவர்கள் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

22 இந்திய மீனவர்களை மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் இன்று முற்பகல் ஆஜர்படுத்தியதை அடுத்து இவர்கள்  விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக கடற்றொழில்  திணைக்களத்தின் மன்னார் மாவட்ட பிரதிப் பணிப்பாளர் பீ.எஸ் மிரண்டா தெரிவித்தார்.

மன்னாரில் கைதான இந்திய மீனவர்களின் 05 படகுகளை தடுத்து வைக்குமாறு மாவட்ட நீதவான் ஆனந்தி கனகரட்ணம் உத்தரவு பிறப்பித்ததாகவும் அவர் கூறினார்.

மேலும் திருகோணமலையில் நேற்றிரவு கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கிழக்கு கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்கள் 07 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் ஆஜர்படுத்தியதை அடுத்து, இந்திய மீனவர்களை அடுத்த மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்