இந்திய மீனவர்கள் ஏழு பேர் கிழக்கு கடலில் கைது

இந்திய மீனவர்கள் ஏழு பேர் கிழக்கு கடலில் கைது

இந்திய மீனவர்கள் ஏழு பேர் கிழக்கு கடலில் கைது

எழுத்தாளர் Staff Writer

20 Jun, 2014 | 12:46 pm

கிழக்கு கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் ஏழு இந்திய மீனவர்களை கடற்படையினர் நேற்றிரவு கைது செய்துள்ளனர்.

இந்திய மீனவர்களுடன் அவர்களின் படகு மற்றும் மீன்பிடி உபகரணங்களும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.

மேலதிக விசாரணைகளின் பொருட்டு இந்த மீனவர்களை கடற்படையினர் திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கைதான இந்திய மீனவர்கள் ஏழு பேரையும் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்செய்வதற்கான நடவடிக்கைகளை துறைமுக பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, நெடுந்தீவு மற்றும் தலைமன்னார் கடற்பரப்புகளிலும் கடந்த இரண்டு நாட்களில் 46 இந்திய மீனவர்கள் இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்