அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்காவிடின், சட்டத்தை நாடுவோம் – ஹக்கீம்

அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்காவிடின், சட்டத்தை நாடுவோம் – ஹக்கீம்

எழுத்தாளர் Staff Writer

20 Jun, 2014 | 9:19 pm

அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்காத பட்சத்தில், சட்ட ரீதியில் தீர்வொன்றை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கிம் தெரிவிக்கின்றார்.

ஐக்கிய நாடுகளின் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பான உதவி பொதுச் செயலாளர் ஒஸ்கா பெர்னான்டஸ் டரென்கோ, நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமை இன்று பிற்பகல் சந்தித்தார்.

இதன்பின்னரே, நீதியமைச்சர் இந்தக் கருத்தை தெரிவித்தார்.

இதேவேளை, அமெரிக்க இராஜாங்க செயலகத்தின் தெற்காசிய நடவடிக்கைகளுக்கான அமெரிக்க பிரதி உதவி செயலாளர் அத்துல் கேஷப்பை, நீதி அமைச்சர் இன்று முற்பகல் சந்தித்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்