அதிபர்களின் அசமந்தப் போக்கால் மாணவர்கள் அடையாள அட்டைகளை பெறுவதில் சிக்கல்

அதிபர்களின் அசமந்தப் போக்கால் மாணவர்கள் அடையாள அட்டைகளை பெறுவதில் சிக்கல்

அதிபர்களின் அசமந்தப் போக்கால் மாணவர்கள் அடையாள அட்டைகளை பெறுவதில் சிக்கல்

எழுத்தாளர் Staff Writer

20 Jun, 2014 | 12:22 pm

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக இம்முறை தோற்றவுள்ள மாணவர்களின் தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை அனுப்புவதில் பாடசாலை அதிபர்கள் அசமந்த போக்குடன் செயற்படுவதாக ஆட்பதிவுத் திணைக்களம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என ஆட்பதிவு ஆணையாளர் ஆர்.எம்.எஸ்.சரத் குமார குறிப்பிடுகின்றார்.

ஒக்டோபர் 31 ஆம் திகதியன்று 16 வயது பூர்த்தியாகவுள்ள மாணவர்களின் விண்ணப்பங்களை, மே மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்புமாறு கடந்த பெப்ரவரி மாதமளவில் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டிருந்ததாக ஆட்பதிவு ஆணையாளர் சுட்டிக்காட்டினார்.

அதிபர்களின் அசமந்தப்போக்கு காரணமாக மாணவர்களுக்கான அடையாள அட்டைகளை விநியோகிப்பதில் சிக்கல்நிலை ஏற்படக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்