அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற சர்ச்சை; விஜய்க்கு எதிராக போஸ்டர்

அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற சர்ச்சை; விஜய்க்கு எதிராக போஸ்டர்

அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற சர்ச்சை; விஜய்க்கு எதிராக போஸ்டர்

எழுத்தாளர் Staff Writer

20 Jun, 2014 | 3:39 pm

தமிழ் சினிமாவில் என்றும் சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் ரஜினிகாந்த். இவர் இடத்தை பிடிக்க கோலிவுட்டில் பல நடிகர்களுக்கிடையே போட்டி நிலவுகிறது.  இதில் முதல் இடத்தில் இருப்பவர்கள் அஜித் மற்றும் விஜய்.

சமீபத்தில் ஒரு வார இதழ் ஒன்று அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என்று ஒரு கருத்து கணிப்பை நடத்தியது, இதில் நடிகர் விஜய்கு அதிக வாக்குகள் கிடைத்தது. அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்பதை போல் அந்த இதழ் செய்தியையும் வெளியிட்டது.

இதைக் கண்ட ரஜினி ரசிகர்கள் பலர் தங்கள் எதிர்பை காட்டும் நோக்கத்தில், அந்த இதழை கண்டித்து பல இடங்களில் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இதில் என்றும் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி தான், யாராலும் அவர் இடத்தை பிடிக்க இயலாது என்று குறிப்பிட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்