அகதிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது – அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலம்

அகதிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது – அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலம்

அகதிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது – அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலம்

எழுத்தாளர் Staff Writer

20 Jun, 2014 | 9:24 pm

உலகிலுள்ள அகதிகளின் எண்ணிக்கை, தற்போது இரட்டிப்பாகியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலம் தெரிவிக்கின்றது.

2004 ஆம் ஆண்டு 15 மில்லியனாக காணப்பட்ட அகதிகளின் எண்ணிக்கை இந்த வருடம் 35.6  மில்லியனை எட்டியுள்ளதாக சர்வதேச அகதிகள் தினத்தை முன்னிட்டு, ஐ.நா அகதிகள் உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் அதிகளவிலான அகதிகள் வாழும் வலயமாக, ஆசியா காணப்படுவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் 2009 ஆம் ஆண்டு 11,400  அகதிகள் காணப்பட்ட போதிலும், தற்போது 291 அகதிகளும், ஆயிரத்து 547 புகலிடக் கோரிக்கையாளர்களுமே காணப்படுவதாக ஐ.நா தரவுகள் குறிப்பிடுகின்றன.

உள்ளக இடம்பெயர்வுக்கானவர்களை சொந்த இடங்களில் குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் துரிதமான முன்னெடுத்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்