வடமாகாண சபையை செயற்பட விடாது தடுப்பவர்களே தமிழ் இனத் துரோகிகள் – விக்னேஸ்வரன்

வடமாகாண சபையை செயற்பட விடாது தடுப்பவர்களே தமிழ் இனத் துரோகிகள் – விக்னேஸ்வரன்

எழுத்தாளர் Staff Writer

17 Jun, 2014 | 7:37 pm

வடமாகாண சபையை செயற்பட விடாது தடுப்பவர்களே தமிழ் இனத் துரோகிகள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவிக்கின்றார்.

வடமாகாண சபையின் முதலமைச்சர் உள்ளிட்ட குழுவினர் முல்லைத்தீவின் துணுக்காய் மாந்தை கிழக்கு பகுதிக்கு இன்று விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

மாந்தை கிழக்கு பகுதியில் வசிக்கும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் இந்தக் குழுவினர் கேட்டறிந்துக்கொண்டுள்ளனர்.

துணுக்காய் பிரதேசத்தில் இயங்கிவரும் இரண்டு கருங்கல் குவாரிகளையும் வடமாகாண முதலமைச்சர் உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டுள்ளனர்.

பின்னர் துணுக்காய் பிரதேச சபையில் கருத்து வெளியிட்ட முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தம்மை தமிழினத் துரோகி என கூறுகின்றபோதிலும் வடமாகாண சபையை செயற்பட விடாது தடுப்பவர்களே தமிழினத் துரோகிகள் என கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்