மாயமான மலேசிய விமானத்தைத் தேடும் பணி மீண்டும் ஆரம்பம்

மாயமான மலேசிய விமானத்தைத் தேடும் பணி மீண்டும் ஆரம்பம்

மாயமான மலேசிய விமானத்தைத் தேடும் பணி மீண்டும் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

17 Jun, 2014 | 3:12 pm

காணாமற்போன மலேசியாவின் எம்எச் 370 விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கும் கடற்பரப்பிற்கு செல்ல தீர்மானித்துள்ளதாக மீட்பு பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மலேசிய விமானம் இறுதியாக பயணித்த கடற்பரப்பின் புதிய வரைபடமொன்று இங்கிலாந்து நிறுவனமொன்றினால் வரையப்பட்டிருந்தது.

இந்த புதிய வரைபடம் வெளிவரும் வரையில் மீட்பு பணிகள் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மலேசிய விமானம் காணாமற்போன 100 நாட்கள் கடந்துள்ள நிலையில் இந்து சமுத்திரத்தில் இந்த வாரத்திற்குள் மீண்டும் மீட்பு பணிகள் ஆரம்பிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்