மனித உரிமை விசாரணை நடத்தப்படுவது நாட்டின் அரசியலமைப்புக்கு எதிரான செயல்- ஜனக்க பண்டார

மனித உரிமை விசாரணை நடத்தப்படுவது நாட்டின் அரசியலமைப்புக்கு எதிரான செயல்- ஜனக்க பண்டார

மனித உரிமை விசாரணை நடத்தப்படுவது நாட்டின் அரசியலமைப்புக்கு எதிரான செயல்- ஜனக்க பண்டார

எழுத்தாளர் Staff Writer

17 Jun, 2014 | 8:38 pm

இலங்கை தொடர்பில் சர்வதேச மனித உரிமை விசாரணை நடத்தப்படுவது நாட்டின் அரசியலமைப்புக்கு எதிரான செயல் என அரசாங்கம் பாராளுமன்றத்தில் இன்று வலியுறுத்தியுள்ளது.

இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் விசாரணை செய்யவுள்ள சர்வதேச குழு நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதியளிக்கக் கூடாது என தெரிவித்து சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை மீதான விவாதம் பாராளுமன்றத்தில் இன்று ஆரம்பமானது.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரால் நியமிக்கப்பட்டுள்ள குழுவினர் இலங்கைக்கு எதிரான விசாரணைகளை மேற்கொண்டால் அது, நாட்டின் நல்லிணக்க செயற்பாடுகளையும், சமாதானத்தையும் பாதிக்கும் என இந்தப் பிரேரணையில் குறிப்பிட்டுள்ளது.

அந்த விசாரணை இலங்கையின் நற்பெயருக்கும் சுயாதீனத் தன்மைக்கும் பாதகமாக அமையலாம் எனவும் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரேரணையை இன்று சபையில் சமர்ப்பித்து உரையாற்றிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற ஜானக்க பண்டார, ஐக்கிய நாடுகள் சபைக்கு சவால் விடுக்கும் எண்ணத்தில் பிரேரணையை சமர்ப்பிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

எனினும், ஐநா மனித உரிமைகள் பேரவை நாட்டின் அரசியல் அமைப்புக்கு முரணாக செயற்படுவதை அனுமதிக்க முடியாது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் மக்களின் இறையாண்மைக்கும், நாட்டின் இறைமைக்கும் தாக்கத்தை செலுத்தும் என்பதால், ஜனாதிபதி அல்லது பாராளுமன்றத்தினால் மாத்திரம் அது தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே கருத்துக்கணிப்பொன்று நடத்தப்பட வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ஜனக்க பண்டார கோரிக்கை விடுத்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்