பேருவளை மற்றும் அளுத்கம பொலிஸ் பிரிவுகளில் தொடர்ந்தும் பொலிஸ் ஊடரங்குச் சட்டம்

பேருவளை மற்றும் அளுத்கம பொலிஸ் பிரிவுகளில் தொடர்ந்தும் பொலிஸ் ஊடரங்குச் சட்டம்

எழுத்தாளர் Staff Writer

17 Jun, 2014 | 9:26 pm

அளுத்கம மற்றும் பேருவளை ஆகிய பிரதேசங்களில் தொடர்ந்தும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

பிரதேசத்தின் பாதுகாப்பிற்காக  பொலிஸார் , பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மதுகம ஹேனேகம பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வெலிபென்ன நகரில் சில கடைகளுக்கும் நேற்று தீ வைக்கப்பட்டது.

மதுகம, ஹேனேகம பிரதேசத்தின் பண்ணை ஒன்றின் காவலாளி ஒருவர் இதன்போது உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தின் போது அவருடன் பணியாற்றிய மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

58 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை வெலிபென்ன நகரில் சில வர்த்த நிலையங்கள் மீது நேற்றிரவு சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

எனினும் இன்று மதியம் நிலமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுருந்ததுடன் பிரதெசத்தின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.

வேறு பகுதிகளில் இருந்து வந்தவர்களே இவ்வாறு செயற்படுவதாக வெலிபென்ன பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

அஜித் ரோஹன தெரிவித்த கருத்து:-

“வெளியில் இருந்து வந்தவர்கள் இதனை செய்துள்ளதாக சிலர் கூறியுள்ளனர்.  அது தொடர்பில் நாம் தற்போது ஆராய்கின்றோம்.  கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு அது குறித்து விசாரணைகளை மேற்கொள்கிறது. அந்த பிரதேசத்திலோ அல்லது வேறு பிரதெசங்களில் இருந்தோ வந்து இதனுடன் தொடர்புபட்டிருந்தால் நாம் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம். தற்பொது அளுத்கம, பேருவளை, மதுகம, வெலிபென்ன ஆகிய பொலிஸ் நிலையங்கள் ஊடாக 41 பேர் கைது செய்யப்பட்டுள்னர்.  அவர்களில் 25 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.’

இதேவேளை, பேருவளை மற்றும் அளுத்கம பகுதிகளில் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய கூறினார்.

பிரிகேடியர் ருவன்வணிகசூரிய தெரிவித்த கருத்து:-

“அளுத்கம, பேருவளை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் ஏற்பட்ட நிலமைகளை கருத்திற் கொண்டு பொலிஸார் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  அதன்படி அளுக்கம, வெலிபென்ன, தர்கா நகர், மற்றும் பேருவளை பிரதெசங்களில் இராணுவம் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.  பொலிஸாருடன் இணைந்து அவர்கள் பிரதேசத்தின் பாதுகாப்பிற்காக செயற்படுகின்றனர்.)

இன்று காலை எட்டு மணியில் இருந்து நான்கு மணி த்தியாலங்கள் பேருவளை மற்றும் அளுக்கம பிரதேசங்களில் ஊடரங்குச் சட்டம் தளர்த்தப்பட்டது.

எனினும் மதியம் 12 மணி முதல் மீண்டும் அப்பகுதிகளுக்களில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை மதுகம மற்றும் பேருவளை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது காயமடைந்த 23 பேர் களுத்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர்  டொக்டர் பிரதீப் விஜேசிங்க கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்