தேவகவுடா கட்சித் தலைவர்கள் இலங்கை விஜயம்: தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை

தேவகவுடா கட்சித் தலைவர்கள் இலங்கை விஜயம்: தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை

தேவகவுடா கட்சித் தலைவர்கள் இலங்கை விஜயம்: தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை

எழுத்தாளர் Bella Dalima

17 Jun, 2014 | 5:23 pm

தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்கும் நோக்கில் இந்திய முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளக் கட்சித் தலைவர்கள் 45 பேர் நேற்று (16) இலங்கையை வந்தடைந்தனர்.

நான்கு நாள் பயணமாக இலங்கை வந்துள்ள இந்தக் குழுவிற்கு முன்னாள் முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி தலைமை வகிப்பதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 2013 சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், மக்களவைத் தேர்தல், இடைத் தேர்தல்கள் என அனைத்து தேர்தல்களிலும் தேவகவுடா கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

இந்நிலையில், கட்சியின் தொடர் தோல்விக்கான காரணம் குறித்து ஆராயவும் முக்கியத் தலைவர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் நோக்கிலும் அவர்கள் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளதாவும் த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பில் உள்ள‌ நட்சத்திர விடுதியில் 2 நாட்களும், கண்டியில் 2 நாட்களும் தங்கும் இவர்கள் வரும்‌ 19ஆம் திகதி மாலை பெங்களூர் திரும்பவுள்ளனர்.

அரசியல் தலைவர்கள் எவரையும் சந்திக்கும் நோக்கில் இந்த விஜயத்தை அவர்கள் மேற்கொண்டிருக்கவில்லை. மாறாக, பயண செலவைக் குறைக்கும் நோக்கிலேயே அவர்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்