தனுஷை சூப்பர் ஸ்டார் என புகழும் அமிதாப்

தனுஷை சூப்பர் ஸ்டார் என புகழும் அமிதாப்

தனுஷை சூப்பர் ஸ்டார் என புகழும் அமிதாப்

எழுத்தாளர் Staff Writer

17 Jun, 2014 | 12:49 pm

கொலை வெறி பாடல் மூலம் உலக அளவில் பிரபலம் அடைந்தவர் தனுஷ். இதை தொடர்ந்து பொலிவுட்டில் இவர் நடித்த ராஞ்சனா படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. இதுவரை எந்த தமிழ் நடிகருக்கும் கிடைக்காத வரவேற்பு இது.

தற்போது பிரபல இயக்குனர் பால்கி இயக்கும் ஹிந்தி படத்தில் தனுஷ் நடித்து வருகிறார், இதில் பொலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இவர் தனது ட்விட்டரில் ‘சூப்பர் ஸ்டார் தனுஷை நான் பிரேசில் கால்பந்து அணியின் நியுமேராக தான் பார்க்கிறேன், இருவரும் அவர்கள் துறையில் சிறந்து விளங்குகிறார்கள்’ என்று  குறிப்பிட்டுள்ளார்.

Amitabh Bachchan ‏@SrBachchan
For some reason I get the feeling that super star Dhanush from the South and Neymar, Brasil, have a resemblance !!


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்