சாதனைக் கோலை பதிவு செய்தார் அமெரிக்க அணியின் தலைவர்

சாதனைக் கோலை பதிவு செய்தார் அமெரிக்க அணியின் தலைவர்

சாதனைக் கோலை பதிவு செய்தார் அமெரிக்க அணியின் தலைவர்

எழுத்தாளர் Staff Writer

17 Jun, 2014 | 3:03 pm

உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் அமெரிக்க அணியின் தலைவர் கிளைன்ட் டெம்ப்சே கால்பந்தாட்ட வரலாற்றில் வேகமாக கோலொன்றை போட்டதன் மூலம் வேகமாக போடப்பட்ட ஐந்தாவது கோல் என்ற  சாதனை நேற்றைய போட்டியில் நிகழ்த்தப்பட்டது.

நடால்லில் நடைபெற்ற கானாவிற்கு எதிரான போட்டியிலயே அவர் இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

சுமார் 40,000 ரசிகர்களுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த போட்டியில் அமெரிக்க அணியின் தலைவர் க்ளின்ட் டிமிப்சி முதலாவது கோலைப்போட்டார்.

போட்டி ஆரம்பமாகி 29 ஆவது நிமிடத்தில் இந்த கோல் போடப்பட்டதுடன் கால்பந்தாட்ட வரலாற்றில் வேகமாக போடப்பட்ட ஐந்தாவது கோலாக இது பதிவாகியுள்ளது.

போட்டியின் முதல் பாதியில் 1-0 என்ற கணக்கில் அமெரிக்கா முன்னிலையிலிருந்தது.

கானா வீரர் அன்ட்ரி அயோவ் 85 ஆவது நிமிடத்தில் கோலொன்றைப்
போட்டார்.

86ஆவது நிமிடத்தில் அமெரிக்க வீரர் ஜோன் பூரூக்ஸ் அடுத்த கோல்  அணியின் வெற்றியை உறுதி செய்தது.

இதனடிப்படையில் ஜீ பிரிவில் அமெரிக்கா இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளதுடன். இந்தப் பிரிவில் போர்த்துக்கலுடனான போட்டியில் வெற்றி பெற்ற ஜேர்மனி முன்னிலை வகிக்கின்றது.

இதேவேளை லீக் போட்டிகளில் இன்றைய தினமும் மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன.

இதன் முதல் போட்டி இலங்கை நேரப்படி இன்று இரவு 9.30 க்கு பெல்ஜியம் மற்றும் அல்ஜீரிய அணிகளுக்குடையில் நடைபெறவுள்ளது.

அத்துடன் முதலாவது போட்டியில் வெற்றிக் கொண்ட களிப்பில் பிரேஸில் அணி இன்று மெக்சிக்கோ அணியை சந்திக்கின்றது.

மூன்றாவது போட்டி ரஷ்யா மற்றும் தென்கொரிய அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்