குச்சவெளியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின்  சடலம்

குச்சவெளியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம்

குச்சவெளியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம்

எழுத்தாளர் Staff Writer

17 Jun, 2014 | 2:31 pm

திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவின் நிலாவெளி பெரியகுளம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பெரியகுளம் பகுதியிலுள்ள வீட்டில் நீண்டகாலமாக தனிமையில் வசித்துவந்த ஒருவரே வீட்டு முற்றத்திலுள்ள மரத்தில் தொங்கிய நிலையில் சடமாக மீட்கப்பட்டுள்ளார்.

அத்துடன் வீட்டின் முற்றத்தில் கறுப்பு மற்றும் வெள்ளைக்கொடிகள் பறக்கவிடப்பட்ட நிலையிலேயே சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

சம்பவ இடத்திற்கு சென்று குச்சவெளி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்