கிளிநொச்சியில் வாள்வெட்டு; மூவர் காயம்

கிளிநொச்சியில் வாள்வெட்டு; மூவர் காயம்

கிளிநொச்சியில் வாள்வெட்டு; மூவர் காயம்

எழுத்தாளர் Staff Writer

17 Jun, 2014 | 12:17 pm

கிளிநொச்சி விநாயகபுரம் பகுதியில் ஏற்பட்ட குழு மோதலில் மூவர் காயமடைந்துள்ளனர்.

விநாயகப்புரம் பகுதியில் அமைந்துள்ள ஆலயம் ஒன்றின் வருடாந்த விழாவில் ஏற்பட்ட மோதலின்போது இன்று அதிகாலை 3 மணியளவில் மூவர் வாள்வெட்டுக்கு இலக்கானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக  அனுராதபுரம் வைத்தியசாலைக்கும் யாழ். போதனா வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.

வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சிலரை கைது செய்வதற்கான விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மோதல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி தலைமையக பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்