களுவரகஸ்வெவ பிரதேச சபையின் உப தலைவர் பிணையில் விடுதலை

களுவரகஸ்வெவ பிரதேச சபையின் உப தலைவர் பிணையில் விடுதலை

களுவரகஸ்வெவ பிரதேச சபையின் உப தலைவர் பிணையில் விடுதலை

எழுத்தாளர் Staff Writer

17 Jun, 2014 | 8:27 pm

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில், கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த களுவரகஸ்வெவ பிரதேச சபையின் உப தலைவர் உள்ளிட்ட 7 பேர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் இதற்கான உத்தரவு  பிறப்பிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது

இதற்கமைய சந்தேகநபர்கள் தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும், ஐயாயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் விடுவிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற உழவு இயந்திரமொன்றை கைப்பற்றிய பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கியதாக  களுவரகஸ்வெவ பிரதேச சபையின் உப தலைவர் உள்ளிட்ட ஏழுபேருக்கும் எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்