உயிர் மற்றும் உடைமைகளை சேதமாக்க வேண்டியதில்லை – ஞானிஸ்ஸர தேரர்

உயிர் மற்றும் உடைமைகளை சேதமாக்க வேண்டியதில்லை – ஞானிஸ்ஸர தேரர்

எழுத்தாளர் Staff Writer

17 Jun, 2014 | 10:05 pm

அளுத்கம மற்றும் பேருவளை ஆகிய பகுதிகளில்  இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக ஸ்ரீ லங்கா அமரபுர பீடத்தின் மகாநாயக்க தேரர் தவுல்தென ஞானிஸ்ஸர தேரர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

பேருவளை, அளுத்கம மற்றும் தர்கா நகர் ஆகிய பிரதேசங்களில் தற்போது அமையின்மை காணப்படுவதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பௌத்தர்கள் என்ற வகையில் இன மத பேதங்கள் இன்றி அனைவரும் சமாதானத்துடன் வாழ்ந்த நாடாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எகவே ஏதேனும் பிரச்சனைகள் காணப்படுமாயின் அதனை பேச்சுவார்த்தையின் ஊடாக தீர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர் மற்றும் உடைமைகளை சேதமாக்க வேண்டியதில்லை என்றும் ஸ்ரீ லங்கா அமரபுர பீடத்தின் மகாநாயக்க தேரர்  தவுல்தென ஞானிஸ்ஸர தேரர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிங்கள, முஸ்லிம் மற்றும் தமிழ் ஆகிய மக்கள் ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்வும் அவர் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

பௌத்த சிந்தனையின் ஊடாக சமாதானம் பிறக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா அமரபுர பீடத்தின் மகாநாயக்க தேரர் தவுல்தென ஞானிஸ்ஸர தேரர் தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்