ஈராக்கில் தொடர்ந்தும் தாக்குதல்; ஆயுததாரிகளுக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு?

ஈராக்கில் தொடர்ந்தும் தாக்குதல்; ஆயுததாரிகளுக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு?

ஈராக்கில் தொடர்ந்தும் தாக்குதல்; ஆயுததாரிகளுக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு?

எழுத்தாளர் Staff Writer

17 Jun, 2014 | 11:34 am

ஈராக்கில் தொடர்ந்தும் தாக்குதல்களை நடத்தி வரும் ஆயுததாரிகள் மீது யுத்தக்குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படுவதற்கான சந்தரப்பங்கள் காணப்படுவதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

திட்டமிட்ட கொலைகளானது யுத்தக் குற்றச்சாட்டுக்களாகவே கருதப்படும் என ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.

ஈராக்கிலுள்ள முக்கிய நகரமொன்றை கைப்பற்றியுள்ளதாக ஐ.சி.எஸ் தலைமையிலான ஆயுதக் குழு நேற்று அறிவித்திருந்தது.

கடந்த 15 ஆம்  திகதி ஈராக்கின் இரண்டாவது​ பெரிய நகரான மொசூல் நகரை அவர்கள் கைப்பற்றியதுடன் சுமார் 5 இலட்சம் ஆயுததாரிகள் பல  நகரங்களையும் தமது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.

ஆயுததாரிகளிடமிருந்த சில நகரங்களை இராணுவத்தினர் மீளக்கைப்பற்றிய போதிலும் கர்பலா,  நஜாஃப் மற்றும் தலைநகர் பக்தாத் ஆகிய நகரங்களை  வசப்படுத்துவதற்கான நகர்வுகளை ஆயுததாரிகள் முன்னெடுத்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் ஈராக்கின் பாதுகாப்பு குறித்து ஈரானிடம் கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்துள்ள பென்டகன், ஈராக் இராணுவத்துடன் இணைந்து செயல்படும் எண்ணம் இல்லையென்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்