இலங்கை, இங்கிலாந்து முதல் டெஸ்ட்; ஜொலித்த மூன்று இளம் வீரர்கள்

இலங்கை, இங்கிலாந்து முதல் டெஸ்ட்; ஜொலித்த மூன்று இளம் வீரர்கள்

இலங்கை, இங்கிலாந்து முதல் டெஸ்ட்; ஜொலித்த மூன்று இளம் வீரர்கள்

எழுத்தாளர் Staff Writer

17 Jun, 2014 | 12:12 pm

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் கிரிகெட் போட்டியில் மூன்று வீரா்கள் தமது திறமையை மிகச் சிறந்த முறையில் வெளிப்படுத்தினா்.

இவர்களில் இலங்கையை சேர்ந்த கௌஷால் சில்வா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த கிறிஸ் ஜோர்டன் மற்றும் கரி பலன்ஸ் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

கிறிஸ் ஜோர்டன்
இவர்களிள் தனது முதல் போட்டியில் விளையாடிய கிறிஸ் ஜோர்டன் சகல துறைகளிலும் ஜொலித்ததுடன் 54 ஓட்டங்களையும் 5 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார். இதன் மூலம் தான் ஒரு சகலதுறை ஆட்டக்காரர் என்பதை நிரூபித்துள்ளார்.

chris-jordon

கௌஷால் சில்வா
இலங்கையைச் சோ்ந்த கௌஷால் சில்வா தனது இங்கிலாந்துக்கு எதிராக முதன் முறையாக, விளையாடி 2 இனிங்ஸிலும் அரைச்சத்தை பெற்றுக்கொண்டதுடன் மொத்தமாக 140 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். இதன் மூலம் தான் ஒரு சிறந்த டெஸ்ட் வீரர் என்பதை நீரூபித்துள்ளார். இது இவரது 9ஆவது டெஸ் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

Kaushal-Silva

கரி பலன்ஸ்
தனது இரண்டாவது போட்டியில் விளையாடிய கரி பலன்ஸ் போட்டியின் இரண்டாவது இனிங்ஸில் ஆட்டமிழக்காது 104 ஓட்டங்களை பெற்று தனது முதலாவது சதத்தை பூா்த்தி செய்தார். இக்கட்டான நிலையில் இருந்த இங்கிலாந்து அணியை இவரது சதமே மீட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

gary-balance1

இவர்கள் மூவரும் எதிர் காலத்தில் சிறப்பான வீரர்களாக உருவாகுவார்கள் என்பதில் ஐயமில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்