இலங்கை விஜயத்தின்போது விழிப்புடன் செயற்படுக; ஆஸி. பிரஜைகளுக்கு அறிவுறுத்தல்

இலங்கை விஜயத்தின்போது விழிப்புடன் செயற்படுக; ஆஸி. பிரஜைகளுக்கு அறிவுறுத்தல்

எழுத்தாளர் Staff Writer

17 Jun, 2014 | 2:16 pm

இலங்கைக்கான பயணங்களை மேற்கொள்ளும்போது விழிப்புணர்வுடன் செயற்படுமாறு தமது நாட்டுப் பிரஜைகளுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் அறுவுறுத்தல் விடுத்துள்ளது.

எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மக்கள் அதிகளவில் ஒன்றுகூடும் இடங்களுக்குச் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சு தமது பிரஜைகளுக்கு விடுத்துள்ள பயண ஆலோசனைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இடங்களில் வன்முறைகள் ஏற்படலாம் எனவும் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அளுத்கம மற்றும் பேருவளை பகுதிகளில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சு தமது பிரஜைகளுக்கு இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்