இரண்டு கோடி ரூபா பெறுமதியான வல்லாப்பட்டையுடன் ஒருவர் கைது

இரண்டு கோடி ரூபா பெறுமதியான வல்லாப்பட்டையுடன் ஒருவர் கைது

இரண்டு கோடி ரூபா பெறுமதியான வல்லாப்பட்டையுடன் ஒருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

17 Jun, 2014 | 11:40 am

இரண்டு கோடி ரூபா பெறுமதியான வல்லாப்பட்டை 20 கிலோகிராமுடன் சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமானநிலையத்திலிருந்து இன்று அதிகாலை 4.35 மணிக்கு வெளியேறும் பகுதியில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளரும், நீதி பிரிவின் பணிப்பாளருமான லெஸ்லி காமினி தெரிவித்தார்.

சந்தேகநபரான இலங்கை பிரஜை சாஜா நோக்கி புறப்படவிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் விமான நிலைய சுங்கப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், சுங்க ஊடகப் பேச்சாளரும், நீதி பிரிவின் பணிப்பாளருமான லெஸ்லி காமினி கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்