அளுத்கம மற்றும் பேருவளை அமைதியின்மை தொடர்பில் 41 பேர் கைது

அளுத்கம மற்றும் பேருவளை அமைதியின்மை தொடர்பில் 41 பேர் கைது

அளுத்கம மற்றும் பேருவளை அமைதியின்மை தொடர்பில் 41 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

17 Jun, 2014 | 7:27 pm

அளுத்கம மற்றும் பேருவளை பகுதிகளின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக இராணுவத்தினரை அங்கு நிலை நிறுத்தியுள்ளதாக பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது

பொலிஸாரின் வேண்டுகோளுக்கு இணங்க, குறித்த பகுதிகளின் அமைதியை பாதுகாக்கவும், மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு ஊடக நிலையத்தின் பணிப்பாளரும், இராணுவப் பேச்சாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

அளுத்கம, வெலிபென்ன, தர்காநகர், பேருவளை மற்றும் மக்கொன பகுதிகளில் இராணுவத்தினர் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸாருடன் இணைந்து அந்தப் பகுதியில் அமைதியை உறுதிப்படுத்துவதற்கு இராணுவத்தினர் நடவடிக்கை எடுப்பார்கள் என பிரிகேடியர் ருவன் வணிகசூரிய மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, அளுத்கம மற்றும் பேருவளை பகுதியில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் 41 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

இவர்களில் 10 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்