அளுத்கம பொலிஸில் முறைப்பாடு செய்தும் அவர்கள் மௌனமாக இருந்தனர்- வஜிர தேரர்

அளுத்கம பொலிஸில் முறைப்பாடு செய்தும் அவர்கள் மௌனமாக இருந்தனர்- வஜிர தேரர்

எழுத்தாளர் Staff Writer

17 Jun, 2014 | 10:14 pm

அளுத்கம மற்றும் பேருவளை சம்பவங்கள் தொடர்பில் கருத்து வெளியிடுவதற்காக சில  சமய அமைப்புக்கள் ஒன்றிணைந்து இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

சப்ரகமுவ பல்கலைக்கழகம் பேராசிரியர்  வேந்தர் குபுருகமுவ வஜிர தேரர் –

“அளுத்கம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தோம்.  எனினும் பொலிஸார் மௌனமாக இருந்தனர்.  பிரதேச மக்கள் பொலிஸ் நிலையத்தை சுற்றிவளைத்தனர்.  அவ்வாறு அழுத்தம் கொடுக்கும் போதே அவர்கள் விழித்தெழுந்து முறைப்பாட்டை விசாரணை செய்ய முற்படுகின்றனர்.  ஆரம்பத்திலேயே பொலிஸார் உரிய முறையில் செயற்பட்டிருந்தால் இன்று இந்த நிலமை ஏற்பட்டிருக்காது.”

தேசிய ஒற்றுமைக்கான சமய ஒன்றியம் இணைத் தலைவர் சரத் ஹெட்டியாரச்சி –

“சட்டத்தை இலங்கையில் உறுதிப்படுத்த வேண்டும்.  எதாவது ஒரு சம்பவம் இடம்பெற்றால் அதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தவறான முறையில் செயற்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

தேசிய ஒற்றுமைக்கான சமய ஒன்றியம் இணைத் தலைவர் அல்ஹாஜ் சையத் ஹஸன் மௌலானா –

“அந்த சம்பவத்தை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.  இதுபோன்ற சம்பவங்கள் இதற்குப் பிறகு நடக்ககூடாது என நான் பிராத்தனை செய்கின்றேன்.  இதற்குப் பின்னால் சில மேலைத்தேய சக்திகள் தொடர்பு பட்டிருக்க முடியும் என நான் சந்தேகக்கின்றேன்.”


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்