அளுத்கம, பேருவளை பகுதி அமைதியின்மைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கிழக்கில் ஹர்த்தால் (Video, Photos)

அளுத்கம, பேருவளை பகுதி அமைதியின்மைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கிழக்கில் ஹர்த்தால் (Video, Photos)

எழுத்தாளர் Staff Writer

17 Jun, 2014 | 2:07 pm

கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.

அளுத்கம மற்றும் பேருவளை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட அமைதியின்மைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்த ஹர்த்தால் இன்று முன்னெடுக்கப்படுகிறது.

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் பல பகுதிகளிலேயே இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதிகளிலுள்ள வர்த்தக நிலையங்கள் இன்று மூடப்பட்டிருந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

எனினும், அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகள் இன்று திறந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸார் மற்றும் விசேட அதிரடிபடையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

harthal2

harthal3

harthal

harthal4

harthal5


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்