அளுத்கம, பேருவளை அமைதியின்மைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாட்டின் சில பகுதிகளில் ஹர்த்தால்

அளுத்கம, பேருவளை அமைதியின்மைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாட்டின் சில பகுதிகளில் ஹர்த்தால்

அளுத்கம, பேருவளை அமைதியின்மைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாட்டின் சில பகுதிகளில் ஹர்த்தால்

எழுத்தாளர் Staff Writer

17 Jun, 2014 | 8:10 pm

அளுத்கம மற்றும் பேருவளை பகுதிகளில் ஏற்பட்ட பிரச்சினைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாட்டின் சில பகுதிகளில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.

ஹர்தால் காரணமாக  கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் இன்று  இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருந்தது.

அளுத்கம மற்றும் பேருவளை சம்பவங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து காத்தான்குடியில் இன்று கண்டப் பேரணியொன்று நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான மக்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

முஸ்லீம் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்குமாறும் பேரணியில் கலந்து கொண்டவர்கள் வலியுத்தினர்.

காத்தான்குடி முஹையத்தீன் ஜூம்மாப் பள்ளிவாசலுக்கு அருகில்  ஆரம்பமான இந்த கண்டனப் பேரணி பிரதேச செயலகம் வரை சென்றது.

கண்டனப் பேரணியில் கலந்துகொண்டவர்கள் தமது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தினர்.

இதேவேளை, அளுத்கம மற்றும் பேருவளை சம்பவங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து காத்தான்குடியில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.

வர்த்தகர்கள்  தங்கள் கடைகளை மூடி எதிர்ப்புத் தெரிவித்ததாக எமது செய்தியாளர் கூறினார்

அளுத்கமை மற்றும் பேருவளை சம்பவத்தை கண்டித்து மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா, வாழைச்சேசை மற்றும் ஓட்டமாவடி ஆகிய பகுதிகளிலும் இன்று ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டது.

இதன் காரணமாக பிரதேசத்தின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தின்  ஏறாவூர் பிரதேசத்திலும் இன்று ஹர்த்தால்  அனுஷ்டிக்கப்பட்டது.

வர்த்தக நிலையங்கள் உணவகங்கள் மற்றும் பொதுச் சந்தை என்பன  இதன்போது மூடிப்பட்டிருந்தன.

அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று  வியாபார நிலையங்கள் மூடப்பட்டு அமைதியான முறையில்  ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.

அட்டாளைச்சேனை, பாலமுனை  மற்றும்  ஒலுவில் பகுதிகளிலும்  இன்று  வர்த்தக நிலையங்கள்  மூடப்பட்டிருந்தன.

குறித்த பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸார் மற்றும் விசேட அதிரடிபடையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இனங்களுக்கு இடையில் ஒற்றுமையை மேம்படுத்தும் வகையில் ஓட்டமாவடி பிரதேச சபை மண்டபத்தில் இன்று விசேட பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றது.

நாட்டில் ஒரு சிலரது செயற்பாடுகளின் காரணமாக இனங்களுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்படுவதாகவும் அதனை தவிர்க்கும் வகையில் அனைவரும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் இதன்போது வலியுத்தப்பட்டது.

முஸ்லீம், மற்றும் பௌத மதத் தலைவர்கள் கலந்து கொண்டிருந்த இந்த சந்திப்பில் சமூக செயற்பாட்டாளர்களும் பங்கேற்றிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்