பேருவளை மற்றும் அளுத்கம பகுதிகளில் தொடர்ந்தும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்

பேருவளை மற்றும் அளுத்கம பகுதிகளில் தொடர்ந்தும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்

பேருவளை மற்றும் அளுத்கம பகுதிகளில் தொடர்ந்தும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்

எழுத்தாளர் Staff Writer

16 Jun, 2014 | 1:10 pm

பேருவளை மற்றும் அளுத்கம ஆகிய பொலிஸ் பிரிவுகளில் பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதனால் குறித்த பொலிஸ் பிரிவுகளில் உள்ள வீதிகளில் நடமாடவோ, ஒன்றுகூடவோ எவருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இந்த சட்டத்தை மீறும் வகையில் வீதிகளில் ஒன்றுகூடுபவர்கள் மற்றும் நடமாடுபவர்களை பொலிஸார் கைது செய்வார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேருவளை, மற்றும் அளுத்கம பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் வதந்திரகள் பரப்பப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அந்த வதந்திகளை நம்பி ஏமாற்றமடைய வேண்டாம் எனவும் அவர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போது அந்த பகுதியில் அமைதி நிலை காணப்படுவதாகவும், சட்டத்தையும் அமைதியையும் பாதுகாக்க அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

30 வருட யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் மீண்டும் அத்தகைய ஒரு நிலைமை உருவாகாமல் தடுக்க வேண்டியது அனைத்து இனங்களையும், மதங்களையும் சேர்ந்தவர்களின் பொறுப்பு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்து தரப்பினரும் அமைதியாக செயற்பட வேண்டியது அவசியம் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்